EBM News Tamil
Leading News Portal in Tamil

பசலைக் கீரையின் மருத்துவ குணங்களும், உண்ணும் முறையும்! | Medicinal Properties of Spinach and How to Eat It!


கீரை வகைகளின் மருத்துவப் பலன்கள் குறித்து விவரிக்கும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் தீபா, பசலைக் கீரையின் முக்கியத்துவத்தையும் அடுக்கிறார்.

“நம் அன்றாட உணவின் ஒரு பகுதியாக கீரை இருக்க வேண்டியது கட்டாயம். ஆனால், இன்றைய இளைஞர்களோ கீரை வகை உணவுகளை பெரிதும் விரும்புவதில்லை. அதனால், அவர்களது உணவில் கீரை தவிர்க்கப்படுகிறது. உருளை, கருணை பொன்ற கிழங்கு வகைகளையே பெரிதும் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

பசலைக்கீரை, முருங்கை கீரை, முடக்கத்தான் கீரை, பொன்னாங்கன்னி கீரை, சிறு கீரை, வெந்தய கீரை இப்படி பல வகையான கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக, முள்ளங்கி கீரை கிட்னி பிரச்சினைக்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு கீரைகளிலும் நமது உடலுக்கு தேவையான தாதுகள் அதிகப்படியாக உள்ளன, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் உள்ளன.

கீரையில் உள்ள நார்ச்சத்துக்கள் நமது செரிமான பிரச்சினையை சரி செய்கிறது. மேலும், உடலில் உள்ள கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துகிறது. எலும்புகள் வலிமை பெற செய்வது. முக்கியமாக இதயம், ரத்த நாளங்களை பாதுகாக்கிறது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

பசலைக் கீரையை எப்படி உட்கொள்வது? – கீரையை பொதுவாக கடையல், பொரியல் செய்வதன்றி, சூப்பு மாதிரி செய்து கொடுக்கும்போது குழந்தைகள் விரும்பி உட்கொள்வர். குறிப்பாக பசலைக் கீரையில் மெக்னீசியம் அதிகப்படியாக இருப்பதால், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகியவை கட்டுப்படுத்தப்படுகிறது. இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது பசலைக்கீரை.

இந்த பசலைக்கீரையை நாம் பச்சையாகவே உண்ணலாம். சிறிதளவு பசலைக் கீரையை எடுத்து நன்கு கழுவிய பின்னர் துண்டு, துண்டுகளாக நருக்கி, பட்டர் ஃபுரூட்டை (Avocado) பாதி அளவு துண்டுகளாக நருக்கி சேர்த்துக் கொள்ளலாம். மேலும், இதனுடன் பருப்பு வகைகள் மற்றும் விதைகள் சேர்த்து (சுவைக்கு ஏற்ப) ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து கொள்ளலாம். இதேபோல் சிறிது அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சுவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். இவற்றை காலை உணவுக்கு பதிலாக சாப்பிட்டு வர, B Complex Deficiency-ஐ சரி செய்யலாம்.

பசலைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி இருகின்றன. இதில் Anti-Oxidant அதிகப்படியாக உள்ளது. இதனை உட்கொள்வதன் மூலம், நமது உடலில் ரத்த அணுக்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது” என்கிறார் மருத்துவர் தீபா.