ஜூன் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் தெரியுமா? | full list of smartphones that WhatsApp will not work from June 1 2025
புதுடெல்லி: நாளை (ஜூன் 1, 2025) முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போன்களின் முழு பட்டியல் வெளியாகி உள்ளது அது குறித்து விரிவாக பார்ப்போம்.
வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச தேவைகளை அதன் மென்பொருள் சார்ந்து அதிகரித்து வருகிறது மெட்டா. இது அந்நிறுவனத்தின் வழக்கமான சுழற்சி அப்டேட்களில் ஒரு நடைமுறை. அந்தவகையில் ஆப்பிள் ஐஓஎஸ் 15 இயங்குதளம் அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்கள், ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கு முந்தைய வெர்ஷன்களில் வாட்ஸ்அப் நாளை முதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் செயலி இயங்காத ஸ்மார்ட்போன்களின் பட்டியல்: ஐபோன் 5s, ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்இ (முதல் தலைமுறை), சாம்சங் கேலக்ஸி எஸ்4, சாம்சங் கேலக்ஸி நோட் 3, சோனி எக்ஸ்பீரியா இசட்1, எல்ஜி ஜி2, ஹவாய் அசென்ட் பி6, மோட்டோ ஜி (முதல் தலைமுறை), மோட்டோரோலா ரேஸர் எச்டி, மோட்டோ இ 2014.