EBM News Tamil
Leading News Portal in Tamil

யுடிடி சீசன் 6 மே 31-ம் தேதி தொடக்கம் | Ultimate Table Tennis season six kicks off from May 31 with double header


இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த சீசனில் கலந்து கொள்ளும் 8 அணிகளும் 23 டைகளில் போட்டியிட உள்ளன. இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சேலஞ்சர்ஸ் அணி, அகமதாபாத் எஸ்ஜி பைப்பர்ஸை எதிர்கொள்கிறது. சென்னை லயன்ஸ் தனது ஆட்டத்தில் ஜூன் 2-ம் தேதி அறிமுக அணியான கொல்கத்தா தண்டர்பிளேட்ஸுடன் மோதுகிறது.

ஒவ்வொரு அணியும் லீக் சுற்றில் ஐந்து டைகளில் விளையாடும். ஒவ்வொரு டையும் 5 ஆட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரு டையில் 2 ஆண்கள் ஒற்றையர், இரண்டு பெண்கள் ஒற்றையர் மற்றும் ஒரு கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் இடம்பெறும். லீக் கட்டத்திற்குப் பிறகு, புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்குக்கு முன்னேறும்.

அரையிறுதிப் போட்டிகள் ஜூன் 13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூன் 15-ம் தேதி இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.