ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: சிறப்பு அம்சங்கள் என்னென்ன? | itel a90 smartphone launched in india price specifications
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் ஏ90 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ‘ஏ’ வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது.
பட்ஜெட் விலையில் தரமான கேமரா மற்றும் விரைவான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட்போனை சந்தையில் எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஏஐ அம்சங்கள், டஸ்ட் அண்ட் ஸ்பிளாஷ் அசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:
- 6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன்
- டி7100 ஆக்டா-கோர் பிராசஸர்
- 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
- 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000mAh திறன் கொண்ட பேட்டரி
- 10 வாட்ஸ் சார்ஜர்
- 4ஜிபி ரேம்
- 64ஜிபி / 128ஜிபி ஸ்டோரேஜ்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இந்த போனின் விலை ரூ.6,499 முதல் விற்பனை ஆகிறது