டிஆர்எஸ் கேட்காமல் தவறு செய்த டெவால்ட் பிரேவிஸ்! | Dewald Brevis made a mistake by not asking for DRS
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 214 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது பிரேவிஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.
நடுவர் அவுட் என அறிவித்ததும், முதல் 15 விநாடிகளுக்குள் டிஆர்எஸ் ரிவியூவை பேட்ஸ்மேன்கள் செய்யவேண்டும். ஆனால், பிரேவிஸ் ரிவியூ செய்யாமல் ரன் எடுப்பதில் கவனமாக இருந்தார். அதன் பிறகு ஜடேஜாவுடன், பிரேவிஸ் ஆலோசனை செய்தார். இதைத் தொடர்ந்து டிஆர்ஸ் ரிவியூ செய்ய பிரேவிஸ் முயன்றார். ஆனால், டிஆர்எஸ் ரிவியூ கேட்பதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது என்று நடுவர் தெரிவித்தார்.
ஆனால், டி.வி. ரீபிளேவில் பார்த்த போது, பந்து லெக் சைடில் விலகிச் செல்வது தெரியவந்தது. இதனால் அவர் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. ஒருவேளை, முன்னதாகவே டிஆர்எஸ் ரிவியூ எடுத்திருந்தால் அவுட்டாவதிலிருந்து பிரேவிஸ் தப்பித்திருக்கலாம் என்றும், அதிரடியாக விளையாடக்கூடிய பிரேவிஸ் களத்திலிருந்தால் வெற்றி சிஎஸ்கே பக்கம் வந்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.