EBM News Tamil
Leading News Portal in Tamil

‘பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் ஆயுஷ் மாத்ரே’ – சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் பாராட்டு | Ayush Mhatre plays without any tension CSK coach Fleming


சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஷ் மாத்ரே பதற்றமே இல்லாமல் விளையாடுகிறார் என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: ஆயுஷ் மாத்ரே மிகச் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் திறமை இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங்கில் ஒரு சில்க்கி ஸ்விங் உள்ளது. அதேபோல் ஆக்ரோஷமாகவும் விளையாடக் கூடியவராக உள்ளார். அழுத்தம் உள்ள போட்டிகளில் கூட அவர் பதற்றமின்றி விளையாடுகிறார். அது ஒரு பேட்ஸ்மேனுக்கு முக்கியமாகும்.

மேலும், ஒரு நவீன கால டி20 கிரிக்கெட் வீரருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் ஆயுஷ் மாத்ரேவிடம் உள்ளன. இவை எல்லாவற்றையும் கடந்து, அவர் சிறிது கூட பதற்றம் இல்லாமல் பயிற்சி போட்டிகளிலும், மிகப்பெரிய போட்டியிலும் ரன்களை குவித்ததுதான் என்னை அதிகம் ஈர்த்துவிட்டது. அவருக்கு ஏற்றபடி சிஎஸ்கே அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

முதல் நாளில் இருந்தே அவர் உற்சாகமாக உள்ளார். அவருடன் சிஎஸ்கே அணி ஒரு நீண்ட தூரம் பயணிக்க உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.