EBM News Tamil
Leading News Portal in Tamil

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வி! | Rajasthan lost the match against Kolkata by one run ipl 2025


​கொல்​கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்​டத்​தில் கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யின் கேப்​டன் ரியான் பராக் அதிரடி​யாக குவித்த 95 ரன்​கள் வீணானது.

இந்த ஆட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டனில் நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய கொல்​கத்தா அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 206 ரன்​கள் குவித்​தது.

கொல்​கத்தா அணி​யின் ரஹ்​மானுல்லா குர்​பாஸ் 35, சுனில் நரேன் 11, கேப்​டன் அஜிங்​கிய ரஹானே 30 ரன்​கள் குவித்​தனர். 4-வது வீர​ராக களமிறங்​கிய அங்​கிரிஷ் ரகு​வன்ஷி 31 பந்​துகளில் 44 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழந்​தார். 5-வது விக்​கெட்​டுக்கு ஜோடி சேர்ந்த ஆந்த்ரே ரஸ்​ஸலும், ரிங்கு சிங்​கும், ராஜஸ்​தான் வீரர்​களின் பந்​து​வீச்சை நொறுக்​கினர். ரஸ்​ஸல் 57 ரன்​களும் (25 பந்​து, 4 பவுண்​டரி, 6 சிக்​ஸர்), ரிங்கு சிங் 19 ரன்​களும் (6 பந்​து, ஒரு பவுண்​டரி, 2 சிக்​ஸர்) விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர்.

ராஜஸ்​தான் தரப்​பில் ஜோப்ரா ஆர்ச்​சர், யுத்​விர் சிங், மகேஷ் தீக்​ச​னா, ரியான் பராக் ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டைச் சாய்த்​தனர். இதைத் தொடர்ந்து 207 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் களமிறங்​கிய ராஜஸ்​தான் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 205 ரன்​கள் எடுத்து தோல்வி கண்​டது.

ராஜஸ்​தானின் யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 34, வைபவ் சூர்​ய​வன்ஷி 4, குணால் சிங் ரத்​தோர் 0, துருவ் ஜுரெல் 0, ஷிம்​ரன் ஹெட்​மயர் 29 ரன்​கள் எடுத்​தனர். ஒரு புறம் விக்​கெட்​கள் வீழ்ந்​தா​லும் கேப்​டன் ரியான் பராக் 95 ரன்​கள் (45 பந்​துகள், 6 பவுண்​டரி, 8 சிக்​ஸர்​கள்) சேர்த்து அவுட்​டா​னார்.

கடைசி ஓவரில் 22 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற நிலை​யில் ஜோப்ரா ஆர்ச்​சரும், ஷுபம் துபே​வும் விளை​யாடினர். கடைசி ஓவரை கொல்​கத்தா வீரர் வைபவ் அரோரா ​வீசி​னார்.

முதல் பந்​தில் 2 ரன்​களும், 2-வது பந்​தில் ஒரு ரன்​னும் சேர்க்​கப்​பட்​டன. இதையடுத்து 3-வது பந்தை சிக்​ஸருக்​கும், 4-வது பந்தை பவுண்​டரிக்​கும், 5-வது பந்தை சிக்​ஸருக்​கும் விளாசி​னார் ஷுபம் துபே. கடைசி பந்​தில் 3 ரன்​கள் மட்​டுமே தேவை என்​ப​தால் ஆட்​டத்​தில் பரபரப்பு ஏற்​பட்​டது. ஆனால் கடைசி பந்தை வைபவ் அரோரா யார்க்​க​ராக வீசி​னார்.

இதையடுத்து பந்தை ஷுபம் துபே தட்​டி​விட்டு ரன் எடுக்க ஓடி​னார். ஒரு ரன் எடுத்த பின்​னர் 2-வது ரன்​னுக்​காக இரு​வரும் விரைந்​தனர். அப்​போது நான்​-ஸ்​டிரைக்​கர் முனை​யில் பந்தை ரிங்கு சிங் வீசி​யெறிய அதை சரி​யாக பிடித்து ரன்​-அவுட்​டாக்​கி​னார் வைபவ் அரோ​ரா. ஷுபம் துபே 25, ஜோப்ரா ஆர்ச்​சர் 12 ரன்​கள் சேர்த்​தனர்.

இதையடுத்து ராஜஸ்​தான் அணி​யால் 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 205 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. இதனால் கொல்​கத்தா அணி ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இதைத் தொடர்ந்து கொல்​கத்தா அணி 11 போட்​டிகளில் விளை​யாடி 5-ல் வெற்​றி, 5-ல் தோல்​வி, ஒரு ஆட்​டம் முடிவு இல்லை என்ற நிலை​யில் 11 புள்​ளி​களைப் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. ராஜஸ்​தான் அணி 12 போட்​டிகளில் விளை​யாடி 3-ல் வெற்​றி, 9-ல் தோல்​வி​யுடன் 6 புள்​ளி​களைப் பெற்​றுள்​ளது.

குறைந்த ரன்களில் வெற்றி: இதுவரை ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணி 2 போட்டிகளில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2024-ல் ஆர்சிபி அணிக்கெதிராக கொல்கத்தா அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

ஈடன் கார்டனில் 1,000 ரன்கள்: ஐபிஎல் போட்டிகளில் ஈடன் கார்டன் மைதானத்தில் 1,000 ரன்கள் சேர்த்த 3-வது வீரர் என்ற பெருமையை ஆந்த்ரே ரஸ்ஸல் பெற்றுள்ளார். அவர் இதுவரை 1005 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்பு இந்தப் பெருமையை கவுதம் கம்பீர் (1,407 ரன்கள்), ராபின் உத்தப்பா(1,159 ரன்கள்) பெற்றுள்ளனர்.

தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் விளாசி பராக் சாதனை: இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் 45 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரி உட்பட 95 ரன்களை விளாசி னார். ஆட்டத்தின் 13-வது ஓவரை மொயீன் அலி வீசினார். இதில் தொடர்ச்சியாக 5 சிக்ஸர்களை ரியான் பராக் பறக்கவிட்டார். தொடர்ந்து வருண் சக்கரவர்த்தி வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸரை அடித்தார். இதன் மூலமாக ரியான் பராக் தொடர்ச்சியாக 6 சிக்ஸர் களை அடித்து சாதனை புரிந்துள்ளார்