EBM News Tamil
Leading News Portal in Tamil

லக்னோவை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | PBKS vs LSG Highlights: Punjab Kings beat Lucknow Super Giants by 37 runs IPL 2025


ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியன்ஷ் ஆர்யா, ப்ரப்சிம்ரம் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் பிரியன்ஷ் ஆர்யா ஒரு ரன்னுடன் வெளியேறினார். எதிர்முனையில் ஆடிய ப்ரப்சிம்ரன் 91 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஜோஸ் இங்கிலிஷ் 30 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 45, நேஹால் வதேரா 16, ஷஷாங்க் சிங் 33, மார்கஸ் ஸ்டாய்னின் 15 என 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 236 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பிறகு 237 ரன்கல் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் ஓப்பனர்கள் எய்டன் மார்க்ரன், மிட்சல் மார்ஷ் இருவரும் முதலில் இறங்கினர். இதில் மார்க்ரம் 13 ரன்கள் எடுத்தார். மிட்சர் மார்ஷ் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். நிக்கோலஸ் பூரன் 6 ரன்கள், ரிஷப் பண்ட் 18 எடுத்தனர். அடுத்து இறங்கிய ஆயுஷ் பதோனி மட்டுமே அதிகபட்சமாக 74 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டேவிட் மில்லர் 11, அப்துல் சமது 45, ஆவேஷ் கான் 19 என 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது லக்னோ அணி.