EBM News Tamil
Leading News Portal in Tamil

வாலிபால் பயிற்சி முகாம் சென்னையில் தொடக்கம்! | Volleyball training camp begins in Chennai


சென்னை: சென்னை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு 55 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த பயிற்சி முகாமை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ. ராஜன், எஸ்டிஏடி முன்னாள் அதிகாரி மெர்சி ரெஜினா ஆகியோர் தொடங்கிவைத்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சீருடைகளை வழங்கினர்.

பயிற்சி முகாம் நிறைவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தினகர், பழனியப்பன் ஜெகதீசன், ஶ்ரீ கேசவன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்