EBM News Tamil
Leading News Portal in Tamil

‘தோல்விகளால் பீதியடையப் போவதில்லை’ – சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி | We wont panic over defeats CSK batting coach Hussey


பெங்களூரு: தோல்விகளால் பீதியடையப் போவதில்லை என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி கூறியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சி யாளரான மைக்கேல் ஹஸ்ஸி கூறும்போது, “இந்த ஆண்டு சரியாக நடக்கவில்லை என்ப தற்காக நாங்கள் நிச்சயமாக பீதியடைந்து எல்லாவற்றையும் தூக்கி எறியப் போவதில்லை, நாங்கள் சில பகுதிகளில் நேர்த் தியாக செயல்பட வேண்டும்.

நாங்கள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் அமர்ந்திருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும், நாங்கள் பல ஆட்டங்களை வெல்லவில்லை. ஆனால் உண்மையில் நாங்கள் வெகு தொலைவில் இருப்பதாக நினைக்கவில்லை. பேட்டிங் வரிசையில் சில மேட்ச் வின்னிங் வீரர்கள் உள்ளனர். தொடரில் எந்த அணியுடனும் நிச்சயம் எங்களால் போட்டியிட முடியும்.

டெவால்ட் பிரேவிஸ், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது சிறப்பான விஷயம். அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியில் தங்கள் இடத்தை உயர்த்துவார்கள் என்று நம்புகிறோம். ஒரு சில வெற்றிகள் மற்றும் சில வீரர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால், அது சீசனின் முடிவில் அருமையாக இருக்கும்” என்றார்.