EBM News Tamil
Leading News Portal in Tamil

கென்யாவிலும் டி20 போட்டி! | t20 league franchise cricket in kenya


நைரோபி: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளைப் போலவே கென்யாவிலும் டி20 லீக் போட்டித் தொடர் நடத்தப்படவுள்ளது.

கென்யாவில் முதன்முறையாக டி20 லீக், சிகேடி20 என்ற பெயரில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெறவுள்ளது. இந்த டி20 லீக் போட்டி மூலம் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கும். உள்ளூர் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை வழங்குவதற்கும் கென்யா கிரிக்கெட் வாரியம் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளது.

இந்தப் போட்டியில் 6 அணிகள் பங்கேற்கும். டி20 தொடர் 25 நாட்கள் நடைபெறும். இதில் கும். ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 வெளிநாட்டு வீரர்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு போட்டியில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும்.

இந்தப் போட்டிக்காக ஏஓஎஸ் ஸ்போர்ட் டோர்னமெண்ட் நிறுவனம் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்யவுள்ளது.