‘ஐஸ்கிரீம் சாப்பிடும் வயதில்’ – வைபவ் சூர்யவன்ஷி குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்? | cricket legends players praises prodigy vaibhav suryavanshi ipl 2025 sensation
ராஜஸ்தான் ராயல்ஸின் புதுமுக அதிரடி வரவு வைபவ் சூர்யவன்ஷி நேற்று 35 பந்துகளில் சதம் கண்டு இளம் வயதில் ஐபிஎல் சதம் கண்ட சாதனை வீரர் ஆனார். அவருக்கான பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதிலிருந்து இதோ சில பாராட்டு பொன்முத்துக்கள்…
யூசுப் பதான்: இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்துக்கள். ஐபிஎல் கிரிக்கெட்டில் எனது அதிவேக சத சாதனையை முறியடித்துள்ளீர்கள். அதுவும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்தச் சாதனையை நிகழ்த்தியிருப்பது இரட்டை மகிழ்ச்சி. நானும் ராஜஸ்தான் ராயல்ஸுக்காகத்தன் என் சாதனை சதத்தை எடுத்தேன். இளம் வீரர்களுக்கு இந்த பிரான்சைஸ் செய்வது உண்மையில் மேஜிக்தான். இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது சாம்பியன்!
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்: 14 வயதில் குழந்தைகள் கனவு காணும், ஐஸ்கிரீம் சாப்பிடும். வைபவ் சூர்யவன்ஷி விலைமதிப்பில்லா சதத்தை அதுவும் ஐபிஎல் கோப்பையை வெல்லும் போட்டியில் இருக்கும் அணிக்கு எதிராக எடுத்துள்ளார். வயதுக்கு மீறிய கிளாஸ், தைரியம். ஒரு பெரும் அதிசயனனின் உதயத்தைப் பார்த்து வருகிறோம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் இங்கே.
முகமது ஷமி: வைபவ் சூர்யவன்ஷி என்ன மாதிரியான ஒரு திறமை!! 14 வயதில் சதம் எடுப்பது நினைத்துப் பார்க்க முடியா அதிசயம். தொடர்ந்து பிரகாசி சகோதரா.
தேஜஸ்வி யாதவ்: எங்கள் பிஹார் வீரன் வைபவ் சூர்யவன்ஷி குறித்து பெருமை கொள்கிறோம். 14 வயதில் ஐபிஎல் வரலாற்றின் 2-வது அதிவேக சதம், கீப் இட் அப்.
யுவராஜ் சிங்: 14 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? கண்ணிமைக்காமல் இந்த 14 வயது சிறுவன் உலகின் சிறந்த பவுலர்களை அடித்து நொறுக்குகிறார். வைபவ் சூர்யவன்ஷி – இந்தப்பெயரை நினைவில் கொள்ளவும். பயமற்ற அணுகுமுறை… அடுத்த தலைமுறையினர் பிரகாசிப்பதைப் பார்ப்பதில் பெருமையாக உள்ளது.
சூர்யகுமார் யாதவ்: சூர்யவன்ஷியின் ‘படுகொலை’ ஆட்டத்தைக் கண்டேன். Absolutely insane!
இயன் பிஷப்: வைபவ் சூர்யவன்ஷி 14 வயதில் 35 பந்துகளில் சதம் மறக்க முடியா சாதனை.
சஹல்: இந்தியா அதன் எதிர்காலத்தை நோக்குகிறது! என்ன ஒரு சதம்! தலை வணங்குகிறேன் வீரனே.
வாசிம் ஜாஃபர்: பேபீஸ் டே அவுட். என்ன அடி. தலை வணங்குகிறேன் சிறுவனே.