EBM News Tamil
Leading News Portal in Tamil

முதல் 2 இடங்களுக்குள் வர விரும்புகிறோம்: மனம் திறக்கும் ரஜத் பட்டிதார் | We want to be in top 2 says rcb captain Rajat Patidar


புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

வெற்றிக்குப் பின்னர் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறும்போது, “ஒவ்வொரு ஆட்டமும் இங்கிருந்து முக்கியமானது. ஏனென்றால் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, ஆனால் முதல் 2 இடங்களுக்குள் வர விரும்புகிறோம்.

டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சேஸிங்கில் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்ததால் அழுத்தத்தில் இருந்தோம், ஆனால் விராட் கோலியும், கிருணல் பாண்டியாவும் தங்கள் இன்னிங்ஸை கணக்கிட்டு விளையாடிய விதம், பார்க்க மிகவும் நன்றாக இருந்தது.

பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை செயல்படுத்திய விதமும் பார்க்க நன்றாக இருந்தது. நான் முன்பு கூறியது போல், நாங்கள் மைதானங்களை பார்த்து விளையாடும் அணி அல்ல. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்” என்றார்.