சூர்யவன்ஷி அசத்தல் சதம்: ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி | RR vs GT | Vaibhav Suryavanshi scripts IPL history with fastest half-century of season
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. இதன் படி முதலில் பேட்டிங் இறங்கிய குஜராத் அணியின் சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் சேர்ந்து இன்னிங்ஸை தொடங்கினர். இதில் சாய் சுதர்ஷன் 39 ரன்கள் குவித்தார். கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளுக்கு 84 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜாஸ் பட்லர் அரை சதம், வாஷிங்டன் சுந்தர் 13, ராகுல் டிவாட்டியா 9, ஷாருக் கான் 5 என குஜராத் அணி 209 ரன்கள் எடுத்தது.
210 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய ராஜஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஜெய்ஸ்வாலும், வைபவ் சூர்யவன்ஷியும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஸ்வால் 70, வைபவ் சூர்யவன்ஷி வெறும் 38 பந்துகளில் சதம் (101) அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்த சீசனில் மிக குறைவான பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். நிதிஷ் ராணா 4, ரியான் பராக் 32 என 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது ராஜஸ்தான்.