EBM News Tamil
Leading News Portal in Tamil

கவுதம் காம்பீருக்கு கொலை மிரட்டல் | India Head Coach Gautam Gambhir Requests Action Over Death Threat


புதுடெல்லி: இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரான கவுதம் காம்​பீருக்கு மின்​னஞ்​சலில் கொலை மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் தலைமை பயிற்​சி​யாள​ரும், பாஜக முன்​னாள் எம்​.பி.​யுமான கவுதம் காம்​பீருக்​கு, 2 முறை மின்​னஞ்​சலில் கொலை மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. ஐஎஸ்​ஐஎஸ் காஷ்மீர் என்ற பெயரில் அனுப்​பப்​பட்​டுள்ள மின்​னஞ்​சலில் நான் உன்னை கொல்​லப்​போகிறேன்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ள​தாக காவல்​துறை வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

காஷ்மீரின் பஹல்​காமில் பயங்​கர​வா​தி​கள் 26 பேரை சுட்​டுக் கொன்ற அதே நாளில், சந்​தேகத்​திற்​கிட​மான கணக்​கி​லிருந்து கவுதம் காம்​பீருக்கு அச்​சுறுத்​தல் மின்​னஞ்​சல் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக காம்​பீர் ரஜிந்​தர் நகர் காவல் நிலையத்தில்புகார் அளித்​துள்​ளார். அதில், தனக்​கும் குடும்​பத்​தினருக்​கும் பாது​காப்பு வழங்​க​ வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்​பாக டெல்லி மத்​திய காவல்​துறை துணை ஆணை​யர் எம்​.ஹர்ஷா வர்​தன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், “கவுதம் காம்​பீருக்கு மின்​னஞ்​சலில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டுள்​ளது குறித்து விசா​ரணை நடந்து வரு​கிறது. அவருக்கு ஏற்​கெனவே காவல்​துறை தரப்​பில் பாது​காப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

வணிகவரித்துறை பணியாளர்களுக்கு ஏப்.26-ல் தடகள போட்டி: வணி​கவரித் துறை பணி​யாளர்​களுக்​கான தடகள போட்டி சென்னை நேரு விளை​யாட்​டரங்​கில் நாளை (26-ம் தேதி) நடை​பெறுகிறது. சென்னை வணி​கவரித்​துறை விளை​யாட்டு மற்​றும் பண்​பாட்டு மையம் சார்​பில் இந்த போட்​டிக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

ஆடவர், மகளிருக்கு 100 மீட்​டர் ஓட்​டம், 200 மீட்​டர் ஓட்​டம், 400 மீட்​டர் ஓட்​டம், 800 மீட்​டர் ஓட்​டம், 1500 மீட்​டர் ஓட்​டம், தொடர் ஓட்​டம், நடை பந்​த​யம், தடை தாண்​டு​தல் ஓட்​டம், உயரம் தாண்​டு​தல், நீளம் தாண்​டு​தல் உள்​ளிட்ட போட்​டிகள் நடத்​தப்பட உள்​ளன. இதில் 400-க்​கும் மேற்​பட்ட பணி​யாளர்​கள் கலந்​து கொண்​டு ​சாதனை படைக்​க உள்​ளனர்​.

ஆசிய குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்- 15 வயதுக்கு உட்பட்ட மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள் அம்மான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் யு-15 பிரிவில் இந்தியாவின் நெல்சன் (55 கிலோ எடைப் பிரிவு), சீன தைபேவின் வாங் ஷெங் யங்கை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 61 கிலோ எடைப் பிரிவில் அபிஜித், 64 கிலோ எடைப் பிரிவில் லக்சயா போகத் ஆகியோர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றில் கால் பதித்தனர். மகளிர் பிரிவில் பிரின்சி (52 கிலோ), சம்ருதி சதீஷ் ஷிண்டே (55 கிலோ) ஆகியோரும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.