EBM News Tamil
Leading News Portal in Tamil

கில், சாய், பட்லர் தரமான ஆட்டம்: கொல்கத்தாவுக்கு 199 ரன்கள் இலக்கு | KKR vs GT | gt sets 199 run as target for kkr ipl 2025 gill sai sudharsan buttler


கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 39-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே பந்து வீச முடிவு செய்தார். குஜராத் அணிக்காக கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து சாய் சுதர்ஷன் ஆட்டம் இழந்தார். 6 ஃபோர்கள் மற்றும் 1 சிக்ஸரை அவர் விளாசி இருந்தார். கில் உடன் சேர்ந்து வலுவான கொல்கத்தா பவுலிங் யூனிட்டை பந்தாடினார். தொடர்ந்து ஜாஸ் பட்லர் பேட் செய்ய வந்தார். மறுமுனையில் ஆடிய கில் தொடர்ந்து ரன் சேர்த்தார். 55 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து அவர் ஆட்டமிழந்தார். 10 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார்.

பின்னர் களத்துக்கு வந்த ராகுல் டெவாட்டியா, 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து ஷாருக்கான் பேட் செய்ய வந்தார். அவர் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார். பட்லர், 23 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். 8 ஃபோர்களை அவர் விளாசி இருந்தார். 20 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்தது குஜராத். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, ரஸ்ஸல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற 199 ரன்கள் தேவை.