EBM News Tamil
Leading News Portal in Tamil

குஜராத், கொல்கத்தா அணிகள் இன்று பலப்பரீட்சை | gujarat titans to play with kkr today match preview ipl 2025


கொல்கத்தா: ஐபிஎல் லீக் போட்டியில் இன்று வலுவான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மோதவுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. குஜராத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

கடைசியாக நடைபெற்ற டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வழங்கி வெற்றி தேடித் தந்தனர். சாய் சுதர்ஷன், ஜாஸ் பட்லர், ஷெர்பான் ருதர்போர்ட், ராகுல் டெவாட்டியா, ஷாருக் கான் ஆகியோர் இந்த ஆட்டத்தில் மீண்டும் ஒரு முறை, சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தக்கூடும்.

அதேபோல் பந்துவீச்சில் முகமது சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர், இஷாந்த் சர்மா ஆகியோர் எதிரணிக்கு சவால் விடுபவர்களாக உள்ளனர்.

அதேநேரத்தில் கொல்கத்தா அணி, 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளைப் பெற்று உள்ளது. கடந்த போட்டியில் கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் சரியான பங்களிப்பை வழங்கவில்லை. குயிண்டன் டி காக், சுனில் நரேன், கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் இன்று அதிரடியாக விளையாடும் பட்சத்தில் அணிக்கு வெற்றி வசமாகலாம்.

பவுலிங்கில் ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, சுனில் நரேன், அன்ரிச் நோர்க்கியா, வைபவ் அரோரா ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் எதிரணிக்கு நெருக்கடி தரலாம்.