EBM News Tamil
Leading News Portal in Tamil

5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வீழ்த்தியது பஞ்சாப் | ஐபிஎல் 2025 | IPL 2025: Punjab Kings beat Royal Challengers Bengaluru by 5-wickets


பெங்களூரு: நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட் 4 ரன்கள், கோலி 1 ரன்களுடன் வெளியேறினர்.

அடுத்து இறங்கிய ரஜத் பட்டிதார் 23 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, குருணல் பாண்டியா என அடுத்தடுத்து விக்கெட் விழவே, அணி மிதான ரசிகர்களின் நம்பிக்கை தகர்ந்தது. ஆனால் அடுத்து இறங்கிய டிம் டேவிட் அரை சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் அவர் ஆடிய வெறியாட்டமே அணியின் நம்பிக்கையை மீட்டெடுத்தது. ஒரு நோ பால் உட்பட கடைசி மூன்று பந்துகளில், டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 14 ஓவர்களில் ஆர்சிபி 95 ரன்கள் எடுத்திருந்தது.

96 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் இறங்கியது. ஓப்பனிங் வீரர்களான ப்ரியன்ஷ் ஆர்யா 16 ரன்களும், ப்ரப்சிம்ரன் சிங் 13 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஷ்ரேயஸ் ஐயர் 7, ஜோஷ் இங்கிலீஷ் 14, நேஹல் வதேரா 33, ஷஷாங்க் 1 என 12.1 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் அணி.