EBM News Tamil
Leading News Portal in Tamil

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார் சுருச்சி சிங் | Suruchi Singh wins gold in shooting


லிமா: பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற மனு பாகர் 242.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யாவோ குயான்சுன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி வெண்கலப் பதக்கம் வென்றார்.