EBM News Tamil
Leading News Portal in Tamil

பச்சை நிற ஆடையில் விளையாடிய ஆர்சிபி வீரர்கள்! | RCB players played in green jersey ipl 2025


ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பச்சை நிற ஆடையணிந்து விளையாடினர்.

இதுதொடர்பான தகவலை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், பெங்களூரு அணி வீரர்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2011-ம் ஆண்டு முதலே ஆர்சிபி அணி ‘கோ கிரீன்’ என்ற கலாச்சார முன்னெடுப்பை நடத்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை ஆர்சிபி அணி நிர்வாகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.