EBM News Tamil
Leading News Portal in Tamil

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக வெற்றி: கேப்டன் சஞ்சு சாம்சன் சாதனை | Most wins for Rajasthan Royals as Captain Sanju Samson record ipl 2025


முலான்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

ஐபிஎல்-2025 சீசனின் 18-வது ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இதையடுத்து, ஐபிஎல் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் தலைமையில் ராஜஸ்தான் அணி 32-வது வெற்றியைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு அதிக வெற்றிகளை தேடித் தந்த கேப்டன் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். இதற்கு முன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஷேன் வார்னே 31 ஆட்டங்களில் அந்த அணிக்கு வெற்றி தேடித்தந்து சாதனை படைத்திருந்தார்.