‘தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்’ – சொல்கிறார் அக்சர் படேல் | we wish to make impact says dc captain axar patel ipl 2025
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஆட்டத்தில் 25 ரன்களில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ்.
இந்நிலையில், அது குறித்து அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல் கூறும்போது, “தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது பெரிய விஷயம். பெரியதோ சிறியதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். இதுதான் திட்டம், அது இதுவரை வெற்றிகரமாக உள்ளது.
விரலில் காயம் ஏற்பட்டதால் என்னை பாதுகாத்துக் கொள்ளவே பந்து வீச்சில் ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசினேன். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் கேட்ச்களை தவறவிடுகிறோம். இதனால் ஆட்டத்தின் போக்கு எந்த நேரத்திலும் மாறலாம்” என்றார்.