EBM News Tamil
Leading News Portal in Tamil

ரோஹித் சர்மா காயம்! | mumbai indians player rohit sharma injury ipl 2025


ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை.

பயிற்சியின் போது அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டதால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.

ரோஹித் சர்மா, நடப்பு ஐபிஎல் தொடரில் ரன்கள் சேர்க்க தடுமாறி வருகிறார். அவர், முதல் 3 ஆட்டங்களிலும் முறையே 0, 8, 13 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார்.