‘தோனி என் கிரிக்கெட் தந்தை’ – மதீஷா பதிரனா நெகிழ்ச்சி | Dhoni is my cricket father csk bowler Pathirana heart touching words ipl 2025
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ‘தி மேக்கிங் ஆஃப் மதீஷா பதிரனா’ என்ற ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் இளம் வேகப்பந்து வீச்சாளரான பதிரனாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொகுத்து கூறப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் பதிரனா கூறும்போது, “தோனி எனது தந்தையைப் போன்றவர், ஏனென்றால் நான் சிஎஸ்கேவில் இருக்கும்போது அவர் எனக்கு ஆலோசனைகள் வழங்கி ஆதரவு கொடுக்கிறார் மற்றும் வழிகாட்டுகிறார். இது என் தந்தை என் வீட்டில் செய்ததைப் போன்றது. அதனால்தான் தோனியை எனது கிரிக்கெட் தந்தையாக கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2022-ம் ஆண்டு சீசன் முதல் பதிரனா விளையாடி வருகிறார். 499 பந்துகளில் சிஎஸ்கே அணிக்காக வீசி, 38 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசி ஓவர்களில் துல்லியமாக யார்க்கர் வீசும் அபார திறன் படைத்தவர்.