EBM News Tamil
Leading News Portal in Tamil

யுடிடி பயிற்சியாளரானார் ராமன் சுப்பிரமணியன் | Raman Subramanian appointed as UTT coach


அகமதாபாத்: இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் ஆதரவுடன் நீரஜ் பஜாஜ் மற்றும் விட்டா டானி ஆகியோரை உரிமையாளராக கொண்ட அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) லீக் வரும் மே 29 முதல் ஜூன் 15 வரை அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளின் பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சீசன் 2 சாம்பியனான தபாங் டெல்லி டி.டி.சி அணிக்கு பயிற்சியாளராக துரோணாச்சார்யா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராமன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று சரத் கமல் மற்றும் மணிகா பத்ரா போன்ற நட்சத்திரங்களுக்கு பயிற்சியளித்த ஜெர்மனியின் கிறிஸ் ஃபிஃபர், அகமதாபாத் எஸ்ஜி பைபர்ஸ் அணியின் பயிற்சியாளராக தேர்வாகி உள்ளார்.