ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை வாரிக்கொடுத்த பவுலரான ஆர்ச்சர்! | rr bowler jofra Archer conceded most runs in IPL history
ஹைதராபாத்: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றாமல் 76 ரன்களை வழங்கினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை அவர் படைத்தார்.
இந்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 286 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ரன்கள் எடுத்தது. 44 ரன்களில் ஆட்டத்தை வென்றது கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
இதற்கு முன்னர் கடந்த 2024-ம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய மோஹித் சர்மா, டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 73 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதை தற்போது மிஞ்சியுள்ளார் ஜோப்ரா ஆர்ச்சர்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலர்கள்
- 0/76 – ஆர்ச்சர் – 2025ம் ஆண்டு சீசன்
- 0/73 – மோஹித் சர்மா – 2024ம் ஆண்டு சீசன்
- 0/70 – பஸில் தாம்பி – 2018ம் ஆண்டு சீசன்
- 0/69 – யஷ் தயாள் – 2023ம் ஆண்டு சீசன்
- 1/68 – ரீஸ் டாப்லி – 2024ம் ஆண்டு சீசன்