EBM News Tamil
Leading News Portal in Tamil

உலகக் கோப்பை தொடருக்கு ஜப்பான் கால்பந்து அணி தகுதி! | japan first team to qualify fifa world cup football 2026


சைதமா: 2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெறுகிறது. தொடரை நடத்துவதால் இந்த 3 அணிகளும் நேரடியாக தகுதி பெற்றிருந்தன. இதை தவிர்த்து தற்போது முதல் அணியாக ஜப்பான் உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

நேற்று தனது சொந்த மண்ணில் நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் ஜப்பான் அணி, பக்ரைனை எதிர்த்து விளையாடியது. இதில் ஜப்பான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. அந்த அணி தரப்பில் டெய்ச்சி கமடா, டேக்ஃபுசா குபோ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.