EBM News Tamil
Leading News Portal in Tamil

“நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காரணமே சச்சின்தான்” – ஷுப்மன் கில் நினைவுப் பகிர்வு! | I even have a photo with Sachin Sir and Glenn Maxwel: Shubman Gill recalls


தனது ஐபிஎல் அனுபவங்கள் குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து ஷுப்மன் கில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தூக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “நான் என் அப்பாவுடன் மூன்று அல்லது நான்கு ஐபிஎல் போட்டிகளை நேரில் பார்த்துள்ளேன். ஐபிஎல் தொடங்கி இரண்டாவது அல்லது மூன்றாவது ஆண்டில், மும்பை இந்தியன்ஸ் அங்கு பயிற்சிக்காக வந்தது. எனக்கு அப்போது 9 அல்லது 10 வயது இருக்கும். என்னிடம் சச்சின் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல்லுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. பயிற்சியின்போது அவர்களுக்கு நான் பந்து வீசி கொடுத்தேன். அது என் முதல் ஐபிஎல் நினைவுகளில் ஒன்று. அப்போது மிகவும் பதட்டமாக இருந்தேன், ஆனால் ஏற்கனவே சச்சினை பற்றி எனக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவர் தான் நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காரணம். என் அப்பா அவரின் மிகப்பெரிய ரசிகர். எங்கள் கிராமத்தில் சச்சின் போஸ்டர்கள் இருந்தன.

ஒவ்வொரு போட்டியிலும், ஒவ்வொரு வாரத்திலும் புதிய அனுபவங்களை கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு வீரரும் தனித்தன்மையுடன் வருகிறார்கள். ஒரு கேப்டனாக, ஒவ்வொரு வீரரின் திறமையையும் அதிகபட்சமாக பயன்படுத்துவது முக்கியம். அவர்களின் பலவீனங்கள், பலம் ஆகியவற்றை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடும் அனுபவம் அதிகரிக்கும்போது, வெற்றி மற்றும் தோல்வி ஆகியவை தலைமைத்துவத்தைக் கட்டமைக்க உதவுகின்றன. ஆரம்பத்தில், நான் ஒ ஒற்றை ஆளாக இருந்தேன், ஆனால் தலைமையேற்ற பிறகு, சக வீரர்களுடன் உரையாடுவதன் அவசியத்தை புரிந்து கொண்டேன். அவர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டுமெனில், கேப்டன் அவர்களை நேரடியாக அணுகுவது முக்கியமானது” இவ்வாறு ஷுப்மன் கில் தெரிவித்தார்.