EBM News Tamil
Leading News Portal in Tamil

ஐபிஎல் தொடரில் மிட்செல் மார்ஷ் பங்கேற்பு | Mitchell Marsh to participate in IPL 2025


சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான மிட்செல் மார்ஷ், முதுகு வலி காரணமாக பாகிஸ்தானில் சமீபத்தில் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர், ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? என்பதில் சந்தேகம் இருந்து வந்தது. மிட்செல் மார்ஷ் இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ரூ.3.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ், ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர், வரும் 18-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைய உள்ளார். இந்த சீசனில் அவர், பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம் பெறுவார் எனவும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.