EBM News Tamil
Leading News Portal in Tamil

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதி சுற்றில் லக்சயா சென் | lakshya sen enters quarter finals all england badminton


பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோனாதன் கிறிஸ்டியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்தியாவின் லக்சயா சென்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் ஜோனாதன் கிறிஸ்டியை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய லக்சயா சென் 21-13, 21-10 என்ற நேர் செட் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 16-21,13-21 என்ற செட் கணக்கில் போட்டி தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜப்பானின் அகானே யமகுச்சியிடம் தோல்வி அடைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரோகன் கபூர், ருத்விகா ஷிவானி ஜோடி சீனாவின் யான் ஜே ஃபெங், யா சின் வெய் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 10-21, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.