EBM News Tamil
Leading News Portal in Tamil

பிப்.13 உலக வானொலி நாள் ஆனது எப்படி? | about radio uniqueness was explained


அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இன்றைய காலக்கட்டத்திலும் வானொலி அதன் தனித்தன்மையை இழக்காமல் வலம் வந்து கொண்டிருக்கிறது. வானொலி மூலம் அறியும் செய்திகளுக்கு என்றே உலகம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருக்கிறார்கள்.

வானொலியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான யுனெஸ்கோ ‘பிப்ரவரி 13’யை உலக வானொலி நாளாக 2011 இல் அறிவித்தது. 2012ஆம் ஆண்டு முதல் ‘உலக வானொலி நாள்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1946இல் ஐ.நா. வானொலி அலைவரிசை தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 13, உலக வானொலி நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

உலக வானொலி நாளில் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளில் விவாதங்களும் நிகழ்வுகளும் உலகம் முழுவதும் நடைபெறுகின்றன. அந்த நாளில் உள்ளூர் வானொலி நிலையங்களை ஊக்குவிப்பது; பன்னாட்டு வானொலி நிலையங்களுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்துவது போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

ஒலி மூலம் தகவல்களையும் செய்திகளையும் பகிர்ந்துகொள்வதற்காக உருவாக்கப்பட்ட வானொலி, பொழுதுபோக்கின் முகமாக மாறியதே அதன் திருப்புமுனையானது.