Last Updated : 10 Feb, 2025 10:47 AM
Published : 10 Feb 2025 10:47 AM
Last Updated : 10 Feb 2025 10:47 AM
புதுடெல்லி: ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து விலகியுள்ளார்.
ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டி வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சீனாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் காயம் காரணமாக பி.வி. சிந்து விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி கடந்த முறை வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US
தவறவிடாதீர்!