EBM News Tamil
Leading News Portal in Tamil

சென்னை ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி தோல்வி | Indian pair loses in Chennai Open tennis final


சென்னை: ஏடிபி சாலஞ்சர் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகி, கைடோ உசுகி ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சாகேத் மைனேனி, ராம்குமார் ராமநாதன் ஜோடி 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் சுவீடனின் இலியாஸ் யெமர் 7-6(5), 7-6(2) என்ற செட் கணக்கில் கிரேட் பிரிட்டனின் பில்லி ஹாரிஸையும், பிரான்ஸின் கைரியன் ஜாக்கெட் 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் செக்குடியரசின் டாலிபோர் ஸ்வர்சினாவையும் வீழ்த்தினர். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இலியாஸ் யெமர், கைரியன் ஜாக்கெட் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.