EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 11 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் | Properties of 11 terrorists in Jammu and Kashmir seized


ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் 11 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்காக செயல்படும் 11 தீவிரவாதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு புலனாய்வுப் படை (எஸ்ஐயு) அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து அவர்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து கிஷ்த்வார் மாவட்ட சிறப்பு போலீஸ் எஸ்.பி. ஜாவித் இக்பால் மிர் கூறும்போது, “சீனாப் பள்ளத்தாக்குப் பகுதியில் தீவிரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் மிக முக்கிய நடவடிக்கையாக இதைப் பார்க்கிறோம். மேலும் இப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்கவும் இது உதவும்.

தலைமறைவாக உள்ள 18 தீவிரவாதிகளுக்கு சொந்தமான சொத்துகள் இங்கே உள்ளன. தற்போது 11 தீவிரவாதிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இப்பகுதியில் தீவிரவாதத்தை அறவை ஒழிக்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.