EBM News Tamil
Leading News Portal in Tamil

யமுனை நதியை தூய்மைப்படுத்துவோம்: பாஜக வாக்குறுதி | We will clean the Yamuna River BJP promise


புதுடெல்லி: டெல்லி சட்டப் பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றப்போவது யார் என்ற போட்டி நிலவி வருகின்றது. விரைவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகத் தேர்தலை சந்திக்கின்றன.

இதனிடையே, பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகளை 2 பகுதிகளாக ஏற்கெனவே வெளியிட்டுவிட்டது. இந்நிலையில் 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால், யமுனா நதியை 3 ஆண்டுகளுக்குள் சுத்தம் செய்வோம். யமுனா நதியை சுத்தம் செய்து லண்டனின் தேம்ஸ் நதியைப் போல மாற்றப்படும். டெல்லி மக்கள் முன்னிலையில் யமுனையில் நீராடுவேன். டெல்லிக்கு சுத்தமான குடிநீர் வழங்குதல், டெல்லியை மாசு இல்லாத நகரமாக மாற்றும் பணிகளைச் செய்யும். இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.