EBM News Tamil
Leading News Portal in Tamil

வாட்ஸ்அப் கணக்கை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உடன் இணைக்கலாம் | WhatsApp account now linked with Facebook Instagram


சென்னை: வாட்ஸ்அப் மெசஞ்சரை மெட்டாவின் பிற சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சத்தை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.

தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் வாட்ஸ்அப் மெசஞ்சரை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களுடன் லிங்க் செய்யும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. இந்த அம்சம் ஒரே நேரத்தில் பல செயலிகளில் பதிவுகளை பகிரும் அனுபவத்தை பயனர்களுக்கு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இது வாட்ஸ்அப்பில் தொடர்ந்து அப்டேட் செய்யும் பயனர்களும் உதவும். இந்த அம்சம் உலக முழுவதும் படிப்படியாக வெவ்வேறு கட்டங்களில் வரும் நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என மெட்டா தெரிவித்துள்ளது. இந்த அம்சம் இன்ஸடாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது அதில் வாட்ஸ்அப் சேர்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை எப்படி ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாவுடன் லிங்க் செய்வது?

  • பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது லேட்டஸ்ட் வெர்ஷன் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • பின்னர் செட்டிங்ஸ் சென்று அதில் அக்கவுண்ட்ஸ் சென்டர் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். அதில் அக்கவுண்ட்ஸ் சென்டர் ஆப்ஷன் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட பயனர் வசிக்கும் பிராந்தியத்தில் அந்த ஆப்ஷன் இன்னும் வெளியாகவில்லை என அர்த்தம்.
  • அந்த ஆப்ஷன் இருந்தால் கணக்கை லிங்க் செய்யலாம். அப்போது லாக்-இன் விவரங்கள் கேட்கப்படும்.
  • அதில் பதிவுகளை ஷேர் செய்யும் முன்னுரிமையை பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • இந்த அம்சம் பயனர்களுக்கு தேவை இல்லை என்றால் அதை அக்கவுண்ட்ஸ் சென்டரில் இருந்து நீக்கிக் கொள்ளலாம்.