இந்தியாவில் லாவா பிளேஸ் Duo ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | lava blaze duo smartphone launched in india price features
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லாவா பிளேஸ் Duo 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப டெக் கேட்ஜெட்களை பயன்படுத்த விரும்பும் பயனர்களை கருத்தில் கொண்டு புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறனுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது இந்திய சந்தையில் லாவா பிளேஸ் Duo 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் பின்பக்கத்தில் 1.58 இன்ச் AMOLED செகண்டரி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இதில் பயனர்கள் பின்பக்க கேமராவை கொண்டு செல்ஃபி எடுப்பது, போன் அழைப்புகளை பெறவும், நோட்டிபிகேஷன்களை பாக்கவும், மியூசிக் கன்ட்ரோல் செய்வது போன்ற டாஸ்குகளை மேற்கொள்ளலாம்.
சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் பிரதான டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7025 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அப்டேட் மேற்கொள்ளலாம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது
- 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா. இதில் சோனி சென்சார் இடம்பெற்றுள்ளது
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5000mAh பேட்டரி
- 33 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- நீலம் மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் இந்தப் போன் வெளிவந்துள்ளது
- 6ஜிபி/8ஜிபி ரேம்
- 128ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.16,999 என அறிவிக்கப்பட்டுள்ளது