EBM News Tamil
Leading News Portal in Tamil

ரியல்மி 14x 5ஜி ஸ்மார்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | realme 14x 5g launched in india


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம்.

இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது ரியல்மி 14எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.67 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் என இரு வேறு வேரியண்ட்
  • 128 ஜிபி ஸ்டோரேஜ்
  • 6,000mAh பேட்டரி
  • 45 வாட்ஸ் சார்ஜர் இந்த போனுடன் வழங்கப்படுகிறது
  • 5ஜி நெட்வொர்க்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • இந்த போனின் விலை ரூ.14,999 முதல் தொடங்குகிறது