EBM News Tamil
Leading News Portal in Tamil

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரிப்பு | Increase in cylinder prices for commercial use


சென்னை: வர்த்தக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.16 அதிகரித்து ரூ.1,980.50-க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல், வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

இந்நிலையில், டிசம்பர் மாதத்துக்கான வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை ரூ.16 அதிகரித்து ரூ.1,980.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி ரூ.818.50-க்கு விற்பனையாகி வருகிறது.