EBM News Tamil
Leading News Portal in Tamil

வித விதமான கெட்டப்பில் ஈர்க்கும் அஜித் – வைரலாகும் ‘குட் பேட் அக்லி’  புகைப்படங்கள் | ajith good bad ugly movie looks getting viral


சென்னை: அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவரது தோற்றம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. விதவிதமான இந்த லுக், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ படத்தின் கெட்டப் ரசிகர்களை கவர்ந்தது. அதில் முழுக்க வெள்ளை தாடி, வெள்ளை முடியுடன் இருந்தார் அஜித். கிட்டத்தட்ட அதன் இன்னொரு வெர்ஷனாக ‘விடாமுயற்சி’யிலும் அதே கெட்டப்பில் இருப்பதாக படக்குழு வெளியிட்ட போஸ்டர்களில் தெரிந்தது. ஆனால், தற்போது அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘குட் பேட் அக்லி’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பெப்பர் சால்ட் லுக்கில் அட்டகாசமாக இருக்கிறார் அஜித். இந்த லுக்கை படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்டிருந்தார்.

கோட் சூட் அணிந்து கொண்டு ஸ்டைலான அஜித்தின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது. முன்னதாக கையில் டாட்டூவுடன் டி-சர்ட் அணிந்து அஜித்தின் மற்றொரு லுக்கும் அண்மையில் இணையத்தில் வைரலானது. தற்போது கருமையான முடி, தாடியுடன் இளமைத் தோற்றத்தில் புதிய தோற்றம் ஒன்று வைரலாகி வருகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித் எத்தனை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது. ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. படம் பொங்கல் பண்டிகையையொட்டி அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.