ஹரியானா தேர்தல்: 20 வேட்பாளர்களை அறிவித்தது ஆம் ஆத்மி | Haryana Elections Aam Aadmi Party Announces 20 Candidates
புதுடெல்லி: மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டப்பேர வைக்கு அக்.5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மியுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்தது.
இது தொடர்பாக அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதற்கிடையில் இதுவரை 41 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
கூட்டணி தொடர்பாக இதுவரை சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் 20 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ள 12 தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. ஹரியானா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா நேற்று பேசுகையில், “காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்காக ஆம் ஆத்மி காத்திருந்தது. விரைவில் 2-வது பட்டியலும் வெளியிடப்படும்” என்றார்.