EBM News Tamil
Leading News Portal in Tamil

டியான் நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகம் | DION Electric Vehicles Introduces New Electric Two-Wheeler Models


சென்னை: பவர்ட்ரான்ஸ் மொபிலிட்டி நிறுவனத்துக்குச் சொந்தமான, வேகமாக வளர்ந்து வரும் பிராண்டான டியான் மின் வாகன நிறுவனம், அகஸ்டா எஸ்பி, அஸ்டா எப்எச் ஆகிய இரண்டு மாடல்களில் புதிய மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது.

அகஸ்டா எஸ்பி இ-ஸ்கூட்டர் 7.5 கிலோவாட் பீக் பிஎம்எஸ்எம் ஹப் மோட்டாருடன் உயர் செயல்திறனைக் கொண்டது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணிக்க முடியும். மேம்பட்ட பிரேக்கிங் சிஸ்டம். பிரண்ட் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் மூலம் பாதுகாப்பு, சவுகரியம் உறுதி செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.1,79,750ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அஸ்டா எப்எச் ஸ்கூட்டர் ஒரே சார்ஜில் 110 கி.மீ வரை செல்லக்கூடியது. இதன் விலை ரூ.1,29,999-ஆகும். இரண்டு மாடல்களின் பேட்டரியும் 5 ஆண்டு வாரண்டியுடன் வருகிறது. அறிமுக சிறப்பு சலுகையாக இந்த இரண்டு மாடல் ஸ்கூட்டர்களுக்கும் வரும் செப்டம்பர் 23-ம் தேதி வரை ரூ.22,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.