EBM News Tamil
Leading News Portal in Tamil

செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிளின் ‘It’s Glowtime’ நிகழ்வு: ஐபோன் 16 மற்றும் பல சாதனங்கள் அறிமுகம் | Apple Its Glowtime event on September 9 Launch of iPhone 16


நியூயார்க்: எதிர்வரும் செப்டம்பர் 9-ம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் ‘It’s Glowtime’ நிகழ்வு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐபோன் 16 வரிசை போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

ஐபோன் 16 சீரிஸை பொறுத்தவரையில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ மற்றும் ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன. இதில் ஆப்பிள் இண்டலிஜென்ஸ் இடம்பெற்று இருக்கும். ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்கும். இதோடு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் சார்ந்து பெரிய மாற்றங்கள் இருக்காது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல் போன்கள் ஏ17 புரோ சிப்செட்டும், ஐபோன் 16 புரோ மற்றும் 16 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ18 புரோ சிப்செட் இடம்பெற்றுள்ளது.

டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் ஐபோன் 16 சீரிஸ் வெளியாகிறது. இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படாது. ‘சி-டு-சி’ கேபிள் வழங்கப்படும். வழக்கமான பேஸ் மாடல் விலையை காட்டிலும் ஐபோன் 16 போனின் விலை அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.