EBM News Tamil
Leading News Portal in Tamil

இன்பினிக்ஸ் நோட் 40 புரோ+ ரேஸிங் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | infinix note 40 racing edition series launched in india


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் நோட் 40 ரேஸிங் எடிஷன் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. நோட் 40 புரோ+, நோட் 40 புரோ என இரண்டு மாடல் போன்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் நோட் 40 ரேஸிங் எடிஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் டிசைன்வொர்க் உடன் இணைந்து எஃப்1 இன்ஸ்பிரேஷனில் இந்த போன் டிசைன் செய்யப்பட்டுள்ளது. நோட் 40 புரோ+, நோட் 40 புரோ என இரண்டு மாடல் போன்களும் 5ஜி இணைப்பில் இயங்கும்.

நோட் 40 புரோ+: சிறப்பு அம்சங்கள்

  • மீடியாடெக் டிமான்சிட்டி 7020 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • இரண்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி உறுதி அளிக்கப்பட்டுள்ளது
  • 12ஜிபி ரேம்
  • 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 6.78 இன்ச் ஃபுல் ஹெச்டி+ Curved AMOLED டிஸ்பிளே
  • 4,600mAh பேட்டரி
  • 100 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் திறன்
  • வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. அதில் 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
  • 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • இந்த போனின் விலை ரூ.18,999
  • நோட் 40 புரோ மாடல் போனை ரூ.15,999-க்கு பெறலாம்