ஒப்போ F27 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | oppo f27 5g smartphone launched in india
Last Updated : 21 Aug, 2024 10:16 PM
Published : 21 Aug 2024 10:16 PM
Last Updated : 21 Aug 2024 10:16 PM

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்27 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். கடந்த ஜூன் மாதம் வெளியான எஃப்27 புரோ+ 5ஜி போனின் பேஸ் வேரியன்டாக இது வெளிவந்துள்ளது.
செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் இப்போது ஒப்போ நிறுவனத்தின் சார்பில் எஃப்27 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்போவின் ‘எஃப்’ வரிசை (சீரிஸ்) போனாக வெளிவந்துள்ளது. இந்த வரிசை போன்களுக்கு ஸ்மார்ட்போன் பயனர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
‘எஃப்27’ சிறப்பு அம்சங்கள்
- 6.67 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 6300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 8ஜிபி ரேம்
- 128ஜிபி/256ஜிபி என இருவேறு ஸ்டோரேஜ் வேரியன்ட்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- ஏஐ சார்ந்த அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது
- 5,000mAh திறன் கொண்ட பேட்டரி
- 45 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் சப்போர்ட்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
- இதன் விலை ரூ.22,999 முதல் ஆரம்பமாகிறது
FOLLOW US
தவறவிடாதீர்!