EBM News Tamil
Leading News Portal in Tamil

ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | redmi 13 5g smartphone launched in india price features


சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 13 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சியோமி நிறுவனம் இந்தியாவில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்த போனை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி 13 சீரிஸ் வரிசையில் ரெட்மி 13 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இதனுடன் ரோபோ வேக்கம் கிளீனர் எக்ஸ்10, ரெட்மி பட்ஸ் 5சி, சியோமி பாக்கெட் பவர் பேங்க் 10,000mAh மற்றும் சியோமி பவர் பேங்க் 4ஐ 10,000mAh போன்ற சாதனங்கள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ரெட்மி 13: சிறப்பு அம்சங்கள்

  • 6.79 இன்ச் ஃபுள் ஹெச்டி+ டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • இரண்டு முறை இயங்குதள அப்டேட்
  • 108 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • 6ஜிபி/8ஜிபி ரேம்
  • 128ஜிபி ஸ்டோரேஜ்
  • 5,030mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் திறன் கொண்ட சார்ஜர் போனுடன் கிடைக்கிறது
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • வரும் 12-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது
  • இதன் விலை ரூ.13,999. விலையில் அறிமுகம் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது