EBM News Tamil
Leading News Portal in Tamil

வீட்டுப் பணியாளர்களை கொத்தடிமை போல் நடத்தியதாக இந்துஜா குடும்பத்தினர் மீது குற்றச்சாட்டு | Hindujas spent more on dog than on Indian help salary: Switzerland prosecutor


ஜெனிவா: அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் பேங்க் என இந்தியாவில் இந்துஜா குழுமம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி, சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றுகின்றனர்.

இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால்,அவரது மகன் அஜெய் மற்றும் அவரது மனைவி நம்ரதா சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.

இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி வருவதாகவும், அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கி அதிக மணி நேரம் வேலை செய்யமிரட்டுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராகிய எதிர்த்தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், “இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51பிராங்க் (ரூ.2,217) செலவு செய்கின்றனர்.

அதே சமயம், வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் (ரூ.660) வழங்குகின்றனர். ஊழியர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர். இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு 4 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வேண்டும். மேலும் வழக்கு செலவுக்காக 1 மில்லியன் பிராங்க்ஸும், கொடுமைப்படுத்தப்பட்ட பணியாளருக்கு நஷ்ட ஈடாக 3.5 மில்லியன் பிராங்க்ஸும் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.