EBM News Tamil
Leading News Portal in Tamil

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | infinix smart 8hd smartphone launched in india price specifications


சென்னை: இந்திய ஸ்மார்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது.

ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8ஹெச்டி ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஜெட் விலை என்றாலும் அசத்தல் அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.6 இன்ச் ஹெச்டி+ சன்லைட் ரீடெபிள் டிஸ்பிளே
  • UniSOC T606 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
  • 5000mAh பேட்டரி
  • டைப்-சி சார்ஜிங் போர்ட்
  • 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ்
  • 13 மெகாபிக்சல் ட்யூயல் ரியர் கேமரா
  • 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • க்வாட் எல்இடி ரிங் பிளேஷ் கொண்டுள்ளது
  • மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • வரும் 13-ம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை ரூ.6,299. குறிப்பிட்ட வங்கி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தினால் விலையில் சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது