EBM News Tamil
Leading News Portal in Tamil

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றதற்கு இந்தியர்கள் கர்பா நடனமாடி அமெரிக்காவில் உற்சாகம் | Indians dance Garba for UNESCO recognition usa


நியூயார்க்: யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனத்துக்கு இடம் கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இந்திய-அமெரிக்க சமூகத்தினர் நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் உறைபனியையும் பொருட்படுத்தாது வியாழக்கிழமை மாலை ஒன்றுகூடி கர்பா நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி வருண் ஜெப் கூறுகையில், “ குஜராத்தின் கர்பா நடனத்தை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு. இந்தியாவின் பல கலாச்சார கூறுகள் யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார்.

கர்பாவை யுனெஸ்கோ பட்டியலில் சேர்க்க இந்திய அரசு எடுத்த முயற்சிகளுக்கும், பிரதமர் மோடிக்கும் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஐஏ) தலைவர் அங்குர் வைத்யா நன்றி தெரிவித்தார்.