EBM News Tamil
Leading News Portal in Tamil

சோனியாவுக்கு நாய்க்குட்டியை பரிசளித்த ராகுல் | Rahul gifted a puppy to Sonia


புதுடெல்லி: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உலக விலங்குகள் தினத்தையொட்டி நேற்று சமூக ஊடகங்களில் தனது புதிய குடும்ப உறுப்பினரை அறிமுகப்படுத்தினார். நூரி என்று பெயரிடப்பட்ட பெண் நாய்க்குட்டியை கோவாவிலிருந்து வாங்கி தனது தாய் சோனியாவுக்கு ராகுல் பரிசளித்தார்.

சமீபத்தில் கோவாவுக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் அங்குள்ள ஒரு குடும்பத்தை சந்தித்தார். அந்த குடும்பத்திடம் இருந்த ஆண், பெண் நாய் குட்டிகளை கண்டு ரசித்த ராகுல் பின்னர் பெண் நாய் குட்டி நூரியை மட்டும் தனது தாய்க்கு பரிசளிக்க தேர்வு செய்தார். இதுதொடர்பான வீடியோவை யூடியூப் சேனலில் ராகுல் வெளியிட்டுள்ளார்.

ராகுல் காந்தி தேர்வு செய்த நூரி நாய்க்குட்டி ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தை சேர்ந்தது. கோவாவைச் சேர்ந்தநாய் வளர்ப்பாளர்களான ஷர்வானிபித்ரே, அவரது கணவர் ஸ்டான்லி பிரகன்கா ஆகியோரிடம் அந்த இனத்தைச் சேர்ந்த நாய்க்குட்டி இருப்பதை அறிந்த ராகுல் அவர்களிடமிருந்து வாங்கினார்.

டெல்லியில் தனது வீட்டுக்கு சென்ற ராகுல் அந்த நாய்க்குட்டியை கூடையில் வைத்து மூடி தனது தாய் சோனியாவை விட்டு திறந்து பார்க்குமாறு கூறினார். அந்த பெட்டியை திறந்துபார்த்த சோனியா சின்ன நாய்க்குட்டி இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று நாய்க்குட்டியை கொஞ்சியதுடன் அதனை பரிசளித்த ராகுலுக்கு சோனியா நன்றி தெரிவித்தார்.

சோனியா குடும்பத்தில் புதிய உறுப்பினராகியுள்ள நூரி அங்கு ஏற்கெனவே உள்ள நாயுடன் உற்சாகமாக இணைந்து மொபைல் போன் கவரை கடித்து விளையாடும் வீடியோ வலைதளத்தில் வைரலானது.